search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம் தரையிறக்கம்"

    • விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார்.
    • விமானி உடனடியாக ஓடுபாதை அருகே அவசரமாக விமானத்தை தரையிறக்கினார்.

    சென்னையில் இருந்து இன்று கத்தாருக்கு 336 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார்.

    இதையடுத்து விமானி உடனடியாக ஓடுபாதை அருகே அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். சரியான நேரத்தில் கோளாறை கண்டுபிடிக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிரங்க்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இன்று பிற்பகல் 1.40 மணிக்கு லுஃப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டது.
    • விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்த பிறகு சுமார் 2.20 மணியளவில் புறப்பட்டது.

    ஜெர்மனியில் உள்ள பிரங்க்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இன்று பிற்பகல் 1.40 மணிக்கு லுஃப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டது.

    புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோறாறு காரணமாக மீண்டும் பிரங்க்பேர்ட் விமான நிலையத்திற்கே திரும்பியது.

    இதுதொடர்பாக பயணிகளுக்கு கேப்டன் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுது்து, பிரங்கபேர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்த பிறகு சுமார் 2.20 மணியளவில் புறப்பட்டது.

    • பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • முன்னதாக, போது, விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது.

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இண்டிகோ விமானம் 6E 2407 ஒன்று நேற்று டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது, திடீரென மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதால், டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானத்தை மத்தியப் பிரதேசம் மாநிலம், போபாலுக்கு திருப்பிவிடப்பட்டது.

    இந்நிலையில், பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும், அந்த அறிக்கையில், " மருத்துவ அவசரநிலை காரணமாக விமானம் போபாலில் தரையிறக்கப்பட்டதற்கு வருத்தம் தெிரவித்துக் கொள்கிறோம். போபாலில் தரையிறங்கிய பிறகு, விமான நிலையக் குழுவினர், ஒரு நொடி கூட வீணடிக்காமல், விரைவாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை ஆம்புலன்ஸில் ஏற்றி, அவரைப் பாதுகாப்பாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    முந்தைய நாள், கோழிக்கட்டில் இருந்து தம்மம் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படும் போது, விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருப்பதாக பைலட் தெரிவித்தார்.
    • விமானத்தை தொடர்ந்து இயக்கலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    கோவை:

    பெங்களூருவில் இருந்து மாலி நாட்டுக்கு 92 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் விமானத்தில் இருந்து திடீரென அலாரம் ஒலித்தது. விமானத்தில் இருந்து புகை வந்ததற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்ததையடுத்து, விமானம் கோயம்புத்தூர் விமான நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டது.

    கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்ததும் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருப்பதாக பைலட் தெரிவித்தார்.

    எனினும், பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்தனர். அப்போது, விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எச்சரிக்கை அலாரம் பழுதடைந்ததால் அலாரம் ஒலித்ததும் தெரியவந்தது. அத்துடன் விமானத்தை தொடர்ந்து இயக்கலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாக்பூர் விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
    நாக்பூர்:

    பெங்களூருவில் இருந்து இன்று காலை பாட்னா நோக்கி கோ பர்ஸ்ட் பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் 139 பயணிகள் பயணம் செய்தனர். விமானம், காலை 11.15 மணியளவில் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது. அங்கு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

    அனுமதி கிடைத்ததையடுத்து, நாக்பூர் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். விமானம் தரையிறங்கியதும் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட விமானத்தை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
    பொலிவியாவில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது லேண்டிங் கியர் உடைந்ததால் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. எனினும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. #PlaneSkidsOffRunway #BolivianAirport
    லா பாஸ்:

    பெரு நாட்டின் கஸ்கோ நகரில் இருந்து நேற்று ஒரு பயணிகள் விமானம் பொலிவியா தலைநகர் லா பாஸ்க்கு புறப்பட்டு வந்தது. அதில் 122 பயணிகளும், 5 ஊழியர்களும் இருந்தனர்.

    விமானம் லா பாசில் உள்ள எல் ஆல்டோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது லேண்டிங் கியர் உடைந்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சறுக்கிக்கொண்டு ஓடுதளத்தில் ஒடியது. அதிக உராய்வு காரணமாக டயர் வெடித்தது. பின்னர் சிறிது தூரம் சென்றதும் தரையில் மோதியபடி விமானம் நின்றது. விமானத்திற்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    ஆனால், இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 122 பயணிகளுக்கும், 5 விமான ஊழியர்களுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். டயர் வெடித்து விட்டதால் கிரேன் கொண்டு வரப்பட்டு விமானம் அப்புறப்படுத்தப்பட்டது.

    இந்த விபத்து காரணமாக ஓடுதளம் உடனடியாக மூடப்பட்டு, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #PlaneSkidsOffRunway #BolivianAirport
    தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவில் இன்று அவசரமாக தரையிறங்கிய விமானம் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர். #Boeingjetcrashlands #Guyanaairport #Guyanaairportcrashland
    ஜார்ஜ்டவுன்:

    தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா வடக்கு அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

    இந்நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் இருந்து ஏர் ஜமைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ஜெட் ரக விமானம் 126 பயணிகளுடன் கனடா நாட்டில் உள்ள டொரான்ட்டோ நகரை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.

    வானில் உயரக் கிளம்பிய சில நிமிடத்தில் இயந்திர கோளாறு உள்ளதை அறிந்த விமானி அந்த விமானம் உடனடியாக ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

    இதைதொடர்ந்து ,கடுமையான அதிர்வுடன் தாறுமாறாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடுபாதையை  விட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் இருந்த கம்பி வேலியை உடைத்துகொண்டு நின்றது. இந்த விபத்தில் விமானத்தின் இறக்கை உள்ளிட்ட சில பகுதிகள் சேதம் அடைந்தன.

    இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Boeingjetcrashlands #Guyanaairport #Guyanaairportcrashland
    ×